Alsar
Alsar

Alsar :

🔥 அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்.

🔥 அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு முறைகள்:

அல்சர் நோயாளிகள் எப்போதும் வயிறு முட்ட உணவை உண்ணக் கூடாது. அல்சர் உள்ளவர்கள் பால், தயிர்,பால் உணவு, மோரை தவிர்க்க வேண்டும்.

மேலும் புளிப்பான பழ வகைகள், இனிப்பில்லாத இளநீர், வாழைப்பழம் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.

🔥 அதிகம் மிளகாய்த்தூள், மிளகாய் சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து காபி குடிப்பதாலும் பெப்டிக் அல்சர் ஏற்படும்.

🔥 அல்சர் இருப்பவர்கள் மதுவையோ, சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

🔥 சாப்பிட வேண்டிய உணவு முறைகள்:
அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்குச் சாப்பிடவேண்டியது அவசியம். உணவுடன் தினமும் அகத்தி கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது.

🔥 கொஞ்சம் மணத்தக்காளி கீரையை விதையுடன் எடுத்து, அத்துடன் சிறிது கசகசாவையும், ஒரு துண்டு தேங்காயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அந்த சாற்றை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் 15, 20 நாட்களில் அல்சர் புண் ஆறிவிடும்.

🔥 வயிற்றில் வலி ஏற்பட்டால் சிறிது சர்க்கரையையோ அல்லது உப்பையோ வாயில் போட்டு சுவைத்தால் கொஞ்ச நேரத்தில் வலி மறைந்து விடும்.

🔥 மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங்களை அருந்தலாம். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் புதினாவைச் சேர்த்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here