Almond Oil : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Almond Oil :

பாதாம் எண்ணெய் சருமம், உடல் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும்.

* கண்ணுக்கு கீழுள்ள பகுதியில் பாதாம் ஆயில் மற்றும் தேனை சரி விகிதத்தில் தடவிவர கண்ணுக்கு கீழே உள்ள கருவளையம் நீங்கும்.

* தினமும் இரவில் பாதாம் எண்ணெய் தடவி வந்தால் உதடுகளில் வெடிப்புகள் மறைவத்தோடு உதட்டின் நிறங்களும் அழகாக காணப்படும்.

* முகத்தில் உள்ள பழைய செல்களை அழித்து புதிய செல்கள் உருவாகும். இதனால் என்றும் முகமானது புதிய பொலிவுடன் காணப்படும்

* 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை கலந்து சருமத்தில் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ நல்ல மாற்றத்தை காணலாம்.

உங்கள் கண்களை சுற்றி கருவளையமா? கருவளையம் போக்க, இதோ சில டிப்ஸ்!.

* 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் சருமத்தில் தடவ, பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம்.

* தினமும் மேக்கப்பை நீக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் மேக்கப் பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் வறட்சி தடுக்கப்படும்.

* பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் குதிகாலைக் கழுவ பாதங்கள் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here