Allu Sirish About Master Album
Allu Sirish About Master Album

மாஸ்டர் பட பாட்டோடு லாக் டவுனை கழித்து வருவதாக தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஹீரோ ஒருவர் தெரிவித்துள்ளார்.

Allu Sirish About Master Album : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் எப்போது ரிலீசாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அதிலும் வாத்தி கம்மிங் பாட்டு உலக அளவில் ஹிட்டாகியுள்ளது. பிரபலங்கள் பலருக்கும் இந்த பாடல் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபலங்களை போலவே தெலுங்கு சினிமாவில் ஹீரோவான அல்லு சிரிஷ் அவர்களுக்கும் இந்த பாடல் ஃபேவரைட் பாட்டாக அமைந்துள்ளது.

தாஜ்மஹால் பட நடிகையா இது? 39 வயசிலயும் இவ்வளவு ஹாட்டா? பார்த்ததுமே பத்திக் கொள்ளும் புகைப்படங்கள்!

தற்போது அவர் இந்த பாடலை ரிப்பீட் மோடில் கேட்டு வருவதாக ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டிற்கு தளபதி ரசிகர்கள் லைக் மற்றும் ரி ட்வீட்களை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

தற்போது வரை இந்த பதிவிற்கு கிட்டத்தட்ட 7000 ரி ட்வீட்களும் 25 ஆயிரத்துக்கும் அதிகமாக லைக்குகளும் கிடைத்துள்ளன.