வன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Allocation Announcement to Vanniyar Cast : மிகவும் பிற்படு்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டபேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதா வழிவகை செய்யும் வகையில் MBC – V என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழி வகை செய்கிறது.

வன்னியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் வன்னியர் பிரிவினை சேர்ந்த மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.

வன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் - இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!