All England Open
All England Open

All England Open – ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இந்தத்தொடரில் 4-ம் தரவரிசை பெற்றிருந்தார்.

இவர் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் தென்கொரியாவின் சுங் ஜி ஹியுன்-ஐ எதிர்கொண்டார்.

பிவி சிந்துவுக்கு எதிராக சுங் ஜி ஹியுன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல்செட்டை பிவி சிந்து 16-21 என இழந்தார்.

சுதாரித்துக் கொண்ட பிவி சிந்து 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பிவி சிந்து ஆட்டத்திற்கு சுங் ஜி ஹியுனும் பதிலடி கொடுத்தார். என்றாலும் கடும் போராட்டத்திற்குப்பின் பிவி சிந்து 22-20 என போராடி கைப்பற்றினார்.

இறுதியில் பிவி சிந்து 18-21 என அந்த செட்டை இழந்து முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்த தொடரில் பங்கு பெற சிந்து பெரும் பயிற்சி செய்து இருந்தார். மேலும் மற்ற போட்டிளில் கலந்து கொள்தை தவிர்த்து இருந்தது குறிப்பிட தக்கது.

சிந்துவின் இந்த தோல்வி ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. இந்த தோல்வியை தொடர்ந்து சிந்து இந்த போட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து வரும் மற்ற வேறு போட்டிளில் சிந்து கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here