Aleka Movie Trailer

தளபதி விஜயின் பெயரில் புதிய படத்தில் பிக்பாஸ் ஆரி நடித்துள்ள டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Aleka Movie Trailer : தமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆரி அர்ஜுனன்.

இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த அவர் தற்போது உலக நாயகன் கமல்ஹசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் அலேக்கா என்ற படத்தில் ஐஸ்வர்யா தத்தா உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. படத்தில் நடிகர் ஆரி ஜோசப் விஜய் என்று தளபதி விஜயின் பெயரில் நடித்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டீசரை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.