AlaVaikunthapurramuloo TRP Record
AlaVaikunthapurramuloo TRP Record

டிஆர்பி சாதனையில் அஜித் விஜய் படைத்த சாதனைகளை அலேக்காக தூக்கி சாப்பிட்டு புதிய சாதனையை படைத்துள்ளார் பிரபல நடிகர்.

AlaVaikunthapurramuloo TRP Record : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை தற்போது ஒப்பிட்டுக் கொண்டாடும் அளவிற்கு திரையுலகத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் தான் பெரும் போட்டியாக இருந்து வருகின்றன.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக இருந்து வருவதோடு டிஆர்பி-யில் எந்த ஒரு படத்தாலும் அடிக்க முடியாத இடத்தில் இருக்கிறது.

ஆனால் தென்னிந்திய சினிமாவை வைத்துப் பார்க்கையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சரிலெரு நீகேவ்வாரு என்ற திரைப்படம் 23.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று டி ஆர் பி-யில் முதலிடத்தில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலவைகுந்தபுரம்லோ என்ற திரைப்படம் 29.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய சினிமாவிலேயே முதல் இடம் பிடித்துள்ளது.

இதனால் அஜித் விஜய் மகேஷ்பாபு என அத்தனை நடிகர்களின் படங்களின் சாதனையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகரான அல்லு அர்ஜுன்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.