Alaipayuthey Movie Secrets
Alaipayuthey Movie Secrets

அலைபாயுதே ஹிட் சீனுக்கு அஜித்தும் காரணமாக இருந்ததாக மாதவன் கூறியுள்ளார்.

Alaipayuthey Movie Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் அலைபாயுதே.

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ஷாலினி நடித்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து 20 வருடங்கள் ஆகி விட்டது. இருப்பினும் இன்று வரை பலரின் ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது.

ஒரு ஆணுக்கே இப்படின்னா?? சன் ம்யூசிக்கில் நடந்த கொடுமை.. – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அதிலும் ரயில்வே ஸ்டேஷனில் மாதவன் ஷாலினியை பார்த்து நீ அழகா இருக்கனு நினைக்கல என்று நீளமான வசனத்தை பேசுவார். இந்த டயலாக் இன்று வரை பேமஸ்.

இந்த நிலையில் தற்போது இந்த டயலாக் குறித்த சீக்ரெட் கூறியுள்ளார் மாதவன். இந்தக் காட்சியை படமாக்கும்போது நான் என் மனைவி சரிதாவை நினைத்துக் கொண்டேன். அதேபோல் ஷாலினி அவருடைய காதலரான அஜித்தை நினைத்து கொண்டார் என கூறியுள்ளார்.

இந்த இரண்டு விஷயங்களும் தான் இந்த டயலாக் ஹிட்டாக காரணம் என கூறியுள்ளார் மாதவன்.