மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார் இயக்குனர் ஏ எல் விஜய்.

AL Vijay Son Birthday Celebration : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய். இந்த படத்தினை தொடர்ந்து மதராசபட்டினம் தலைவா என பல்வேறு படங்களை இயக்கினார்.

மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய இயக்குனர் விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்

தலைவா படத்தை இயக்கிய போது அப்படத்தின் நாயகியாக நடித்த அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரே வருடத்தில் இவர் தனக்கு விவாகரத்து நடந்து முடிந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த வருடம் இவர்களுக்கு மகனும் பிறந்தான்.

தற்போது தன்னுடைய மகனின் முதல் வயது பிறந்தநாளை மிக கோலாகலமாக கொண்டாடியுள்ளார் இயக்குனர் விஜய். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய இயக்குனர் விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்