இயக்குனர் ஏஎல் விஜய் மற்றும் நடிகர் உதயா ஆகியோரின் தாயார் காலமாகியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்ததை தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் அவர்களின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் மோகினி படத்தின் இயக்குனர் ஆர் மாதேஷ் அவர்களின் தாயார் மரணமடைந்தார்.

திரையுலகை அடுத்தடுத்து சோகத்தில் ஆழ்த்தும் மரணங்கள்.. இயக்குனர் விஜயின் தாயார் காலமானார்

இப்படி திரையில் அடுத்தடுத்து நடந்த மரணங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மரணச் செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பிரபல நடிகர், தயாரிப்பாளரான ஏ எல் அழகப்பன் அவர்களின் மனைவியும் இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் நடிகர் ஏ எல் உதயா ஆகியோரின் தாயார்மான ஏ எல் வள்ளியம்மை அவர்கள் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகை அடுத்தடுத்து சோகத்தில் ஆழ்த்தும் மரணங்கள்.. இயக்குனர் விஜயின் தாயார் காலமானார்

வள்ளியம்மை அவர்களின் இறுதிச் சடங்கு நாளை பெசன்ட் நகர் இடுகாட்டில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.