AL Vijay Blessed With Baby Boy
AL Vijay Blessed With Baby Boy

இயக்குனர் விஜய் அப்பாவாகியதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

AL Vijay Blessed With Baby Boy : தமிழ் சினிமாவில் கிரீடம், மதராசப்பட்டினம், தலைவா, என பல்வேறு படங்களை இயக்கியிருப்பவர் ஏ எல் விஜய்.

விஜய் பிறந்த நாளுக்கு ட்ரீட் இருக்கு.. ஆனால்?? – மாஸ்டர் பட பிரபலம் வைத்த டுவிஸ்ட்!

இவர் தளபதி விஜய்யை வைத்து தலைவா என்ற படத்தை இயக்கி வந்த அந்த படத்தில் நாயகியாக நடித்த அமலா பால் மீது காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான ஒரு வருடத்திலேயே இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். திருமணத்திற்கு பின்பும் அமலாபால் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் ஏ எல் விஜய் கடந்த வருடம் டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

போனி கபூரை போலவே புகழ்பெற்ற இயக்குனர் வீட்டிலும் கொரானா – வெளியானஅதிர்ச்சி அறிக்கை!

இந்தநிலையில் தற்போது இயக்குனர் விஜய்க்கு அழகிய ஆண்மகன் பிறந்துள்ளான். தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஎல் விஜய் அப்பாவாகி இருப்பதை அறிந்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.