Dhanush Amalapaul
விஜய், அமலாபாலின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என புலம்பியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனர் விஜயின் தந்தையுமான ஏ.எல் அழகப்பன்.

தமிழ் சினிமாவில் கிரீடம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல் விஜய். இந்த படத்திற்கு பிறகு மதராசபட்டினம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். விஜயை வைத்து தலைவா என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.

தலைவா படத்தின் போது அப்படத்தில் நாயகியாக நடித்த அமலாபாலுடன் காதல் மலர்ந்து திருமணமும் செய்து கொண்டனர், ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே விவகாரத்து பெற்று கொண்டனர்.

கடந்த வருடம் தான் ஏ.எல் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடந்தது. அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜயின் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ. எல் அழகப்பன் என் மகனுக்கு அமலாபாலுக்கு விவாகரத்து நடக்க தனுஷ் தான் காரணம் என பேட்டி ஒன்றில் புலம்பியுள்ளார்.

அதாவது விஜயும் அமலாபாலும் தலைவா படத்தின் போது காதலிக்க தொடங்கி கல்யாணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அமலாபாலை நடிக்க கூடாது என விஜய் கூறினார், ஆனால் அதையும் மீறி தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

விஜய் நடிக்க வேண்டாம் என கூறியும் அவர் கேட்காமல் தனுஷுடன் அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனால் தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து வரை சென்றது என பேசியுள்ளார்.

அமலா பால் நடிக்க கமிட்டானத்துக்கும் தனுஷுக்கும் இதுல என்ன சம்மந்தம், அவரை எதுக்கு தேவையில்லாமல் உள்ள இழுக்கறீங்க என தனுஷ் ரசிகர்கள் ஏ.எல் அழகப்பனை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.