Akshay Kumar says no to Ajith film : Raghava lawrence | Thala Ajith | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Akshay Kumar says no to Ajith film :

அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 கிளைமேக்ஸ்.!

இவருடைய நடிப்பில் மறக்கவே முடியாத ஒரு படம் வீரம். தனது ஆஸ்தான இயக்குனர் சிவாவுடன் அவர் முதல்முறையாக இணைந்த படம் இதுதான்.

இந்நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறதாம். இதில் விக்கி கௌஷல் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு The Land Of Lungi என பெயர் வைத்துள்ளனர்.

இதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். முன்னதாக இப்படத்தில் அக்‌ஷய் குமார்தான் ஹீரோவாக நடிக்கவேண்டி இருந்ததாம். ஆனால் காஞ்சனா படத்தின் ரீமேக்கிற்காக இப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.