Akshara Haasan Emotional
Akshara Haasan Emotional

Akshara Haasan Emotional : உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். ஹிந்தியில் இயக்குநர் ஆர். பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் தமிழில் இயக்குநர் சிவாவின் ‘விவேகம்’ படத்தின் நடித்துள்ளார் அதைத்தொடர்ந்து ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் இவர்தான் கதாநாயகி. தற்பொழுது தமிழில் விஜய் ஆண்டனி இயக்கத்தில் அருண் விஜய் உடன் சேர்ந்து ‘அக்னிசிறகுகள்’ என்ற படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஓவியா – பிக்பாஸ் குறித்து வெளியான பரபரப்பு பதிவுகள், சிக்கலில் விஜய் டிவி!

ஹிந்தியில் இவர் நடித்த, ‘ஷமிதாப்’ படத்தின் மேக்கப்மேன் சச்சின்தாதா, கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இந்த செய்தியை கேட்டுஅக்‌ஷரா, அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது:

கரோனா பாதிப்பால் சிலர் தங்களது சொந்த பந்தத்தை இழந்த நிலையில் உள்ளோம். “ஷமிதாப்” படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு மேக்கப் கலைஞராக இருந்த என் சகோதரர், ‘சச்சின் தாதா’ கோவிட்19 பாதிப்பால் இறந்துவிட்டார்.

மேலும் அவர் ஒரு நல்ல மனுஷன் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் குணம் உடையவர் இதையெல்லாம் தாண்டி அவர் எனக்கு ஒரு நல்ல பிரெண்ட்.

அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். மேலும் அவரது பிரிவை நினைத்து வாடும் அவரது மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மன உருக்கத்துடன் தனது பதிவில் வெளியிட்டுள்ளார்.