நடிகர் அஜித்தின் ஏகே 63 திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவர் தற்போது மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல திரை நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

மீண்டும் பில்லா பட இயக்குனருடன் இணையும் அஜித்!!… ஏகே 63 மூவி அப்டேட்!.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் கூட்டணியில் பில்லா, ஆரம்பம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மீண்டும் பில்லா பட இயக்குனருடன் இணையும் அஜித்!!… ஏகே 63 மூவி அப்டேட்!.

தற்போது மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட அஜித்திற்கு ஒரு கதை வைத்துள்ளேன் விரைவில் அப்டேட் வரும் என கூறியிருந்தார். அது தற்போது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.