AK62 திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகி உள்ளது.

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் அஜித் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தல அஜித்தின் AK62… வெளியான படப்பிடிப்பு குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்.!

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் தல அஜித்தின் அடுத்த படமான “ஏ கே 62” திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தல அஜித்தின் AK62… வெளியான படப்பிடிப்பு குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்.!

துணிவு படத்தை தொடர்ந்து தல அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் Ak62 என்னும் தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியாகி உறுதியானதை தொடர்ந்து தற்போது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஜனவரி மாதம் 17ஆம் தேதி தொடங்க படகுழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.