ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வைரலாகியுள்ளது.

கோலிவுட் திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் அஜித்குமார் அவரது நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏகே 62 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவனின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காமல் போனதன் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகப்பட்டதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருப்பதாக புதிய இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏகே 62 திரைப்படத்தை மிகாமன், கழகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக திகழ்ந்து மகிழ் திருமணி இயக்க இருப்பதாகவும், ஏகே 63 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான உறுதியான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் விரைவில் தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.