ஏகே 62 திரைப்படத்தில் இணைந்த விஜய் பட நடிகர் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கும் தல அஜித் குமாரின் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அரவிந்த் சாமியை தொடர்ந்து… AK62 வில் இணைந்த விஜய் பட நடிகர்!! - வெளியான நியூ அப்டேட் வைரல்.!

இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘AK62’ திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

அரவிந்த் சாமியை தொடர்ந்து… AK62 வில் இணைந்த விஜய் பட நடிகர்!! - வெளியான நியூ அப்டேட் வைரல்.!

அந்த வகையில் நேற்றைய தினம் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகர் சந்தானம் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது தளபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராமல் இருந்தாலும் இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.