16ஆம் தேதி பூஜை நடைபெற உள்ள நிலையில் அஜித் 61 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

AK61 Pooja and Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

16ஆம் தேதி நடக்கும் பூஜை.. AK61 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான அதிரடி அப்டேட்ஸ்

இந்த படம் இயல்புநிலை திரும்பியது இரண்டு திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படியான நிலையில் அஜித், வினோத், போனிகபூர் கூட்டணி உருவாக உள்ள அஜித் 61 படத்தின் பூஜை 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

16ஆம் தேதி நடக்கும் பூஜை.. AK61 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான அதிரடி அப்டேட்ஸ்

இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் ஆக்சன் படமாக இருக்கும் எனவும் இதில் அஜித் வில்லன் ஹீரோ என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‌‌