நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் புது அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அப்படி போடு…இன்று மாலை வெளியாகும் AK வின் துணிவு அப்டேட்!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்திற்கான போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அப்படி போடு…இன்று மாலை வெளியாகும் AK வின் துணிவு அப்டேட்!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவதோடு இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.