துணிவு திரைப்படத்தில் அஜித் செய்த மூன் வாக் வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி இருந்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

துணிவு அஜித்தின்!!… மூன் வாக் வீடியோ ட்ரெண்டிங்.!

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அஜித் செய்திருந்த ‘மூன் வாக்’ வீடியோ இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த இந்த மூன் வாக் வீடியோ அஜித் அவரது ரசிகர்களுக்காகவே ஆசைப்பட்டு ஆடி இருப்பதாக இயக்குனர் வினோத்தும் அண்மையில் பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.