விஜய்க்கு பிரம்மாண்ட ஹிட்டு கொடுத்த இயக்குனருடன் இணைய உள்ளார் அஜித்‌.

AK 63 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இப்படியான நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த அட்லியுடன் இணைய இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.