Ajith 60 Big Shocking Update : Nerkonda Paarvai , Thala Ajith, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja, Thala 60 updates
தல 60 படத்திற்காக அஜித் எடுக்கப்போகும் ரிஸ்க்கிற்கு ஹீரோயின் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் என்று தான் தோன்றுகிறது.

Ajith 60 Big Shocking Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் எச். வினோத் இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்து விட்டது. மேலும் அவர் நரைத்த முடியிலேயே தான் நடிக்க உள்ளார்.

மீண்டும் அஜித்துடன் போட்டி போடும் ரஜினி – இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இதெல்லாம் சரி தான், ஆனால் அஜித் முதல் முறையாக வளர்ந்து விட்ட நடிகை ஒருவருக்கு இப்படத்தில் அப்பாவாக நடிக்க உள்ளாராம்.

அஜித் இப்படியொரு முடிவை எடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தாலும் அந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்க முன்னணி நடிகைகள் ஒப்பு கொள்வார்களா? என்ற சந்தேகம் தான் அதிகமாக உள்ளது.

தமிழ் நடிகைகள் நிச்சயம் தயக்கம் காட்டுவார்கள் என்பதால் பாலிவுட் நடிகைகள் யாரவது நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.