YouTube video

 Ajith’s Valimai for OTT Release? : – தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஆனால் இதுவரை படக்குழு இத்திரைப்படம் குறித்து எந்தவித அப்படி எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் அவ்வப்போது சில தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரல் ஆகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஆர்கே சுரேஷ் வலிமை படம் பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது வலிமை படத்தின் சண்டைக்காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அஜித் சில ஸ்டண்ட் காட்சிகளில் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டன்ட் செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் வலிமை திரைப்படம் ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்கு கொண்டுவரும் படமாக இருக்கும் என கூறி உள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.