Ajith's Thought on Act With Vijay
Ajith's Thought on Act With Vijay

நானும் விஜய்யும் இணைந்து நடிக்காதது அதற்கு காரணம் என்ன என்பது குறித்து அஜித் பேசியுள்ளார்.

Ajith‘s Thought on Act With Vijay : தமிழ் சினிமாவின் தற்போதைய இருபெரும் துருவங்களாக விளங்குபவர்கள் அஜித், விஜய்.

சிவாஜி, எம்ஜிஆர் வரிசையில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் இவர்களின் பங்கு அளப்பரியது.

அஜித் படத்திற்கு இணையானது நயன்தாரா படம் – ஆர்ஜே பாலாஜி ஓபன்டாக்

அஜித், விஜய் என இருவருக்குமே உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்கள் ரசிகர்கள் எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கின்றனர்.

இருப்பினும் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அத்தனை தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் உண்டு.

ராஜாவின் பார்வையிலே என்ற ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்ததோடு இவர்கள் இருவரும் மீண்டும் இணையவில்லை.

இது குறித்து பல வருடங்களுக்கு முன்பு அஜித் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நானும் விஜய்யும் இணைந்து நடிக்காததற்கு காரணம் என்ன என கூறியுள்ளார்.

அதாவது நாங்கள் இருவரும் தனித்தனியாக நடித்தால் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். இதனால் அவர்கள் பயனடைவார்கள்.

ரேஸர் உடையில் சிம்புவுடன் தல அஜித் – முதல்முறையாக வெளியான Unseen புகைப்படங்கள்!

நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால் பயன்பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையும். நாங்கள் இருவரும் இணைந்து நடிக்காததற்கான காரணங்களில் இதுவும் ஒரு முக்கியமான காரணம் என கூறியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பே அஜித் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறிய தகவல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றன.