Kiran Dembla
Kiran Dembla

அஜித், சூர்யா, தமன்னா, பிரபாஸ், ராஜமௌலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பாடி பிட்னஸ் டிரெய்னராக இருந்த வரும் லேடி பாகுபலியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ajith‘s Fitness Trainer Kiran Dembla : முதல் லேடி பாடி டிரைனராக பெயரெடுத்தவர் கிரண் டெம்பளா. ஆக்ராவை சேர்ந்த இவர் பேட்டி ஒன்றில் பாடி பிட்னஸ் டிரெய்னர் ஆக மாறியது எப்படி என கூறியுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித், சூர்யா, பிரபாஸ், எஸ்எஸ் ராஜமவுலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இவர் பாடி பில்டப் ட்ரெயினராக இருந்து வருகிறார்.

மூளையில் ரத்தக் கட்டி ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று அதன் சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை சாப்பிட்டதால் உடல் எடை கூறியுள்ளார்.

அதன் பிறகு தன்னுடைய எடையை குறைக்க யோகா, உடற்பயி்ற்சி நீச்சல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தியுள்ளார். அப்போது பிட்னஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சிக்ஸ்பேக் வைத்து மிரட்டி உள்ளார்.

அதன்பிறகு ஆக்ராவில் ஜிம் ஒன்றை உருவாக்கி பயிற்சியாளராக பலருக்கு ட்ரெயினிங் கொடுத்து உள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான அஜித் சூர்யா உள்ளிட்ட இருக்கும் இவர் பாடி டிரெய்னராக இருந்துள்ளார். ராம்சரன் மனைவி உபாஸனா திருமணத்திற்கு முன்னர் இவரிடம் எடையை குறைப்பதற்காக பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும் பிரகாஷ்ராஜ், அனுஷ்கா என பல திரையுலக பிரபலங்களுக்கு இவர் டிரெய்னராக இருந்துள்ளார்.

இவர் 6 பேக்ஸ் வைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள், அஜித் உடன் எடுத்துக் கண்ட புகைப்படம் ஆகியவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.