Ajith's Controversy Meme Photo
Ajith's Controversy Meme Photo

வெளியே வரமாட்டேன் போடா என அஜித்தை கிண்டல் அடித்து பிரபல பத்திரிக்கை வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Ajith‘s Controversy Meme Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

அப்படி இருந்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என இன்றுவரை உறுதியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தி தெரியாது போடா என்ற வசனம் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆனது.

விக்கே… விஜய் தலைக்கு விக் எங்க வாங்குகிறார் என எனக்கு தெரியும் – சர்ச்சைக்குரிய பிரபலத்தின் பரபரப்பு பதிவு.!!(Opens in a new browser tab)

இதனை வைத்து அதில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதை குத்திக் காட்டும் விதமாக பிரபல பத்திரிக்கை ஒன்று வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் போடா என டீ சர்ட் அணிந்து அஜித் போஸ் கொடுத்தது போல புகைப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஜித் ரசிகர்கள் பலரும் அந்தப் பத்திரிகையை நார் நாராக கிழித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.