தல அஜித் பைக் பைக்கில் தளபதி விஜய் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
Ajith’s Bike Ride With Vijay : தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்ததாக இருவரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தொழில்ரீதியாக இருவருக்கும் இடையே போட்டிகள் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எப்போதும் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர். இருப்பினும் அஜித் விஜய் ஆகியோர் இணைந்து ஒரே படத்தில் இருந்தால் எப்படி இருக்கும் எவ்வளவு மாஸாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.
ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு எப்போது உண்மையாகும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருக்கிறது.
இப்படி அந்த நிலையில் மாஸ்டர் பட நடிகர் விஜய் டிவி தீனா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல அஜித் பைக் தளபதி விஜய் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
போட்டோல பார்க்கவே செம மாஸா இருக்கு, இது மட்டும் படத்துல நிஜமா நடந்தால் எப்படி இருக்கும் என கூறி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்