Draupathi
திரௌபதி படத்திற்கு தல அஜித் ஆதரவாக களமிறங்கி இருப்பதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் மோகன் பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சாதி ரீதியான படங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. பா. ரஞ்சித் படங்களால் தான் நாங்களும் இப்படியொரு படத்தை எடுத்துள்ளோம் என திரௌபதி படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் படத்தின் ட்ரைலரை பார்த்து விட்டு அஜித் இயக்குனர் மோகனுக்கு போன் செய்து பாராட்டியாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானது.

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி ட்வீட் ஒன்றின் மூலமாக இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த டீவீட்டில் அஜித் எனக்கு போனும் செய்யவில்லை. திரௌபதி படத்திற்காக வாழ்த்தவும் இல்லை என வைரலாகி வரும் புகைப்படம் 5 வருடத்துக்கு முன்பு ஒரு ரசிகனாக எடுத்து கொண்ட புகைப்படம் என விளக்கம் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here