Ajith Vs Vijay Photo

Ajith Vs Vijay Photo : அஜித், விஜய் செய்த செயல்களை ஒப்பிட்டு வழக்கம் போல சண்டையில் இறங்கியுள்ளனர் இரு தரப்பு ரசிகர்களும்.

சமீபத்தில் தளபதி விஜய் காரில் சென்று கொண்டிருந்த போது அவரது ரசிகர்கள் சிலர் அதி வேகத்தில் விஜயை சந்திக்க பைக்கில் பறந்தனர்.

தள்ளி போனது நேர்கொண்ட பார்வை ரிலீஸ் – வெளியான அதிர்ச்சி அப்டேட்.!

இதனை பார்த்த தளபதி விஜய் காரின் கண்ணாடியை இறக்கி தயவு செய்து மெதுவாக போங்க.. ப்ளீஸ் என கெஞ்சி கேட்டு கொண்டார் அந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி இருந்தது.

இதே போல தல அஜித்திற்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை 3 மணிக்கு அஜித் ஏர்போர்ட்டில் இருந்து வெளிய வந்து காரில் சென்ற போது இதே போல சில ரசிகர்கள் துரத்தி செல்ல அஜித் அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினையும் விஜயின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு அஜித் சீட் பெல்ட் போட்டு இருக்கார். ஆனால் விஜய் போடவில்லை என பிரச்னையை துவக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட்டுடன் விஜய் ரசிகர் ஒருவர் அஜித் சரக்கு அடிச்சு இருப்பாரு சீட் பெல்ட் போட்டு இருக்காரு. ஆனால் விஜய் சரக்கு அடிக்கல அதனால சீட் பெல்ட் போடல என கருத்து தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.