Ajith vs STR
Ajith vs STR

Ajith vs STR தல அஜித்தை கிண்டலடித்தது ஏன்? குறளரசன் கிண்டலடித்து உண்மை தானா? என்பது குறித்து சிம்பு தரப்பில் இருந்து விளக்கமளிக்கபட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் அரசியலுக்கு வர வேண்டும். அவரால் மட்டும் தான் 40 ஆண்டு கால திராவிட ஆட்சியில் இருந்து மாற்றம் வரும்.

அஜித் அரசியலுக்கு வர 100% சரியான தருணம் இது தான் என இயக்குனர் சுசீந்திரன் ட்வீட் செய்திருந்தார்.

இந்த டீவீட்டிற்கு குரான் அரசன் டி ராஜேந்தர் என்ற முகநூல் கணக்கில் இருந்து அடுத்த முதல்வர் என்னப்பன்தான்யா. தீபா அம்மா பேரவையுடன் சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதியிலும் வெற்றி பெறும் எனவும் பதிவு செய்யப்பட்டது.

இந்த பதிவிற்கு சிம்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதாவது அது குறளரசன் முகநூல் கணக்கில்லை. அந்த பதிவிற்கும் குரளரசனுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.