Sarkar Vs Viswasam Vs NGK

Sarkar Vs Viswasam Vs NGK : ட்விட்டரில் போட்டி போட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளனர் அஜித், விஜய், சூரியா ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கிய இடங்களில் இருப்பவர்கள் அஜித், விஜய், சூர்யா. இவர்களுடைய நடிப்பில் விரைவில் விஸ்வாசம், சர்கார், NGK ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன.

முதலில் சர்கார் அடுத்த வாரம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதற்கான கொண்டாட்டத்தை தற்போதில் இருந்தே #IthuNammaSARKARDiwali என்ற ஹேஸ்டேக் முலம் தொடங்கியுள்ளனர்.

அதே போல் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.பொங்கலுக்கு இன்னும் 75 நாட்கள் இருப்பதை #75DaysToViswasamCarnival என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சூர்யா ரசிகர்கள் #WeNeedNGKSplOnDiwali என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி தீபாவளிக்கு எங்களுக்கு NGK அப்டேட் வந்தே ஆகணும் என படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த மூன்று ஹேஸ்டேக்கும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து அஜித், விஜய், சூர்யா ரசிகர்களின் பலத்தையும் பாசத்தையும் உணர்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.