Master Vs Valimai
விஜய், அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு மோதலின் விளைவால் மோசமான ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர் அஜித், விஜய். அஜித் நடிப்பில் தற்போது வலிமையையும் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படமும் உருவாகி வருகிறது.

சமீபத்தில் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் வலிமை ஹேஸ்டேக்கின் டிவீட் எண்ணிக்கைகளை முறியடித்து விட்டதாக விஜய் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.

ஆனால் இது பொய் என ஒரு சில வீடியோக்களுடன் அஜித் ரசிகர்கள் #MasterFakeRecordsExposed என்ற ஹேஸ்டேக்குடன் ட்ரெண்ட் செய்கின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் #மண்டியிட்ட_வலிமை என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்கின்றனர். #மானங்கெட்ட_மாஸ்டர்விஜய் என்ற ஹேஸ்டேக்கும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.