ஒரே படத்தில் அஜித், விஜய், விக்ரம் – பிரம்மாண்ட இயக்குனரின் பலே திட்டம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் , விக்ரம் ஆகியோர் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது 2 பாயிண்ட் ஓ படத்தின் இறுதி கட்ட பணியிலும் இந்தியன் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகளிலும் பிஸியாக உள்ளார்.

இவர் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்க இருப்பதாகவும் அதுவும் மிக பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த பிரம்மாண்ட படத்தில் தான் அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் இணைந்து நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.

ஒரே படத்தில் அஜித், விஜய், விக்ரம் - பிரம்மாண்ட இயக்குனரின் பலே திட்டம்.!