Nerkonda-Paarvai

Ajith Vidhya Balan Photo : தல அஜித்துடன் வித்யா பாலன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்துக்கு மனைவியாக சிறப்பு வேடத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கரராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகி இருந்தது. அதன் பிறகு சில புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தது.

நேர்கொண்ட பார்வை குறித்து பேசி அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வித்யா பாலன்!

இந்நிலையில் தற்போது நடிகை வித்யா பாலன் தல அஜித்துடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வித்யா பாலன் ரசிகருடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தில் தான் சுவரில் மாட்டப்பட்டு இருப்பது போல இந்த புகைப்படம் லீக்காகி உள்ளது.

இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக

vidhya balan photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.