Ajith Take Risk in Thala 60
Ajith Take Risk in Thala 60

தல 60-ல் அஜித்தின் ரோல் குறித்த தகவலை தயாரிப்பாளர் வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Ajith Take Risk in Thala 60 : தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து ஆகஸ்ட் 10-ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாக உள்ளது.

அதன் பின்னர் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்திலேயே தல அஜித் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.

நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க காரணமே இவர் தான் – ரகசியத்தை வெளியிட்ட ரங்கராஜ் பாண்டே.!

இந்நிலையில் தற்போது போனி கபூர் அளித்த பேட்டி ஒன்றில் தல 60 படத்தில் அஜித்தின் ரோல் குறித்த தகவலை லைட்டாக கசிய விட்டுள்ளார்.

அதாவது அவர் கூறியது என்னவென்றால் அஜித்திற்கு ரேஸ் மீது அதீத ஆர்வம் என தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த படத்தில் அதையே பயன்படுத்த உள்ளோம் என கூறியுள்ளார்.

இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் மீண்டும் ரிஸ்க் எடுக்கிறாராரே என்ற பதற்றமும் தொற்றி கொண்டுள்ளது.