Ajith Still in Bigg Boss House : Cinema News, Kollywood , Tamil Cinema, Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor
பிக் பாஸ் வீட்டிற்குள் அஜித்தின் ஸ்டில் நேற்று வலம் வந்ததை கண்ட அஜித் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் அதனை சுட்டி காட்டி வருகின்றனர்.

Ajith Still in Bigg Boss House : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருடைய நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இந்த படத்தில் வித்யா பாலன் சிறப்பு வேடத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

தல எப்பயுமே டக்கரு தான், நேர்கொண்ட பார்வை குறித்து நயன்தாரா ட்வீட்.!

படத்தில் நடித்துள்ள அபிராமி தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மக்கள் மத்தியில் அதிகமான எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் அபிராமி நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் நேர்கொண்ட பார்வை அஜித்தின் கெட்டப் பொறிக்கப்பட்ட டி- ஷர்ட்டை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.

தற்போது அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.