தீனா பட வாய்ப்பை தவறவிட்டுள்ளார் பிரபல நடிகர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படம் தீனா. இந்தப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அனைவருக்கும் தெரியும்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். மேலும் லைலா சுரேஷ் கோபி ஒன்றை பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது 90sகளின் ஃபேவரைட் நடிகர் பிரசாந்த் தான். அந்த நேரம் பிரசாந்த் ஓய்வு இல்லாமல் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த படத்தின் வாய்ப்பு மிஸ் ஆனதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.