
அஜித்துக்கு பெருமை சேர்த்துள்ளார் ஆத்விக்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. மேலும் அஜித் சமீபத்தில் பைக் சுற்றுலா பிசினஸ் ஒன்றை தொடங்கினார். இது குறித்த அறிவிப்பும் வெளியானது.

இந்த நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் தனது அப்பா அம்மாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த புட்பால் கிளப் கேம்பிள் பங்கேற்றார்.
இந்த நிலையில் தற்போது இவர் சென்னை FC ஜூனியர் அணியில் போட்டியாளர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் பரவ அஜித் ரசிகர்கள் பலரும் ஆத்விக்கிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
