Ajith Sentiment
Ajith Sentiment

Ajith Sentiment – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதுவே தற்போது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகுமாம்.

அஜித்துக்கு 10-ம் தேதி பெரும்பாலும் வெற்றி படங்களையே கொடுத்துள்ளது. அதனால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளார்களாம்.

அண்மையில் வெளியான விஸ்வாசமும் 10-ம் தேதிதான் வெளியாகி இருந்தது. நேர்கொண்ட பார்வையும் ஆகஸ்ட் 10-ம் தேதி தான் வெளியாகிறது.

தற்போது இந்த படமும் 10-ம் தேதிதான் வெளிவர இருக்கிறது.