Ajith Scolding Shalini
Ajith Scolding Shalini

பிரபல நடிகரை ஷாலினி கண்டும் காணாமல் சென்றதால் அஜித் அவரைத் திட்டியுள்ளார்.

Ajith Scolding Shalini : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தல அஜித் உடன் பணியாற்றிய பெரும்பாலான நடிகர்கள் அவரைப் பற்றி புகழ்ந்து தான் பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு தனக்கென ஒரு நல்ல நற்பெயரை பெற்றுள்ளார்.

அஜித்துடன் ஒரு சில படங்களில் இணைந்து பணியாற்றியவர் பப்லு. இவர் அஜித்தின் சீனியர். பப்லுவின் தங்கையை அஜித் ராகிங் செய்ததாக எண்ணி அவர்மீது கோபம் கொண்டார்.

அதன் பின்னர் தான் தெரிந்தது அந்த அஜித் இவர் இல்லை. இவர் பப்லுவின் தங்கையை பாதுகாத்து வந்தவர் என்று. அதன்பிறகு பப்லு வுக்கும் அஜித்திற்கும் நல்ல நட்பு உருவானது.

புதிய கணவருடன் மீண்டும் ஒரு லிப் லாக் – கூச்சம் இல்லாமல் வனிதா வெளியிட்ட புகைப்படம், கழுவி ஊற்றும் ரசிகர்கள்

இந்த நிலையில் லாக் டவுன் நாட்களுக்கு முன்னதாக ஷாலினி ஹோட்டல் ஒன்றில் பப்லுவை பார்த்துள்ளார். ஆனால் அவருடன் பணியாற்றியதில்லை என்பதால் பேசாமல் சென்றுள்ளார்.

அதன் பிறகு ஷாலினியிடமிருந்து போன் கால் வந்துள்ளது. சார் சாரி நாம இணைந்து பணியாற்றியது இல்லை. நானாக வந்து பேசினால் உங்களுக்கு டிஸ்டர்ப் ஆக இருக்கும் என எண்ணி பேசாமல் இருந்து விட்டேன்.

உங்களைப் பார்த்ததை அஜித்திடம் வந்து சொன்னேன். அவர் என்னுடைய நண்பர், சீனியர் அவரிடம் ஏன் பேசவில்லை என திட்டினார் என கூறி மன்னிப்பு கேட்டதாக பப்லு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.