ஷூட்டிங் தொடங்க தாமதம் ஆனதால் வலிமை படத்திற்கான சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ajith Salary for Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. முதலில் தல அஜித் இந்த படத்திற்கு ரூபாய் 55 கோடி சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுமக்களுக்காக, இலவச வைபை-49 ஸ்மார்ட் கம்பங்கள் : சென்னை மாநகராட்சி

ஆனால் ஷூட்டிங் தொடங்குவதற்கு காலதாமதம் ஆனதால் தன்னுடைய சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தி விட்டதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் பேச்சாக இந்த தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Hotel-லில் நடிகை Andrea வெளியிட்ட வீடியோ! – இப்போ இதான் Trend | Latest Cinema News