Ajith Review to Ponmagal Vanthal
Ajith Review to Ponmagal Vanthal

பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து விட்டு சூர்யாவுக்கு போன் செய்துள்ளார் தல அஜித்.

Ajith Review to Ponmagal Vanthal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக எச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

நிச்சயம் பார்க்க வேண்டிய அஜித்தின் 16 படங்கள் இவை தான் – இதுல உங்க ஃபேவரைட் எது?

போனி கபூர் தயாரித்த இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தது. படத்தில் அஜித் வழக்கறிஞராக பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களுக்கு நீதி வாங்கி கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் தயாரிப்பு ஜோதிகாவின் நடிப்பில் ஜேஜே பெட்ரிக் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் பொன் மகள் வந்தாள்.

இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்திருந்தார். குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுவதை எதிர்த்து வாதாடி குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவார்.

நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்தப் படத்தை பார்த்து விட்டு தல அஜித் சூர்யாவிற்கு போன் செய்துள்ளார்.

நடிகை ஜோதிகாவிடம் ஜோ இதெல்லாம் சரி இல்ல. நடிப்புல பின்னிட்டீங்க நேர்கொண்ட பார்வை படத்தையே மிஞ்சிட்டீங்க என பாராட்டியுள்ளார்.

மேலும் சூர்யாவிடம் ஒரு நல்ல படத்தை தயாரித்து இருக்கீங்க. உங்களோட துணிச்சலுக்கு பாராட்டுக்கள் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் இயக்குனர் பெட்ரிக்கிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

வருஷக்கணக்கா ரத்தம் சிந்தி இந்த படத்தை எடுத்திருக்கோம்.. மாஸ்டர் பட நடிகர் வெளியிட்ட புகைப்படம்.!

அஜித்தின் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் சூர்யா நடிப்பில் ரிலீசாக உள்ள சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.