படத்தில் கமிட் ஆகிய பின்னர் அஜித் நிராகரித்த ஐந்து இயக்குனர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் துணிவு.

இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ஏகே 62 படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

விரைவில் இந்த படத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதற்கு பதிலாக மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குவார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் அஜித் கமிட் ஆகி அதன் பிறகு இருந்து வெளியேறிய 5 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. மகா :

நந்தா பெரியசாமி என்ற இயக்குனரின் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்தில் அஜித் கமிட்டான நடிக்க தொடங்கிய நிலையில் படத்தில் இருந்து வெளியேறினார்.

2. மிரட்டல் ; தீனா படத்தின் வெற்றிக்குப் பிறகு முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் தான் மிரட்டல். இந்த படத்தில் அஜித் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென படத்திலிருந்து வெளியேறினார்.

3. நியூ : எஸ் ஜே சூர்யா இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான இந்த படத்திலும் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு வெளியேறி விட்டார்.

4. நான் கடவுள் : பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தில் இருந்தும் சில காரணங்களால் அஜித் வெளியேறினார்.

5. ஏகே 62 : லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது தற்போது அந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார்.