எல்லை மீறி போனாள் அடிமைப்பட பட்ஜெட்டால் போனி கபூருக்கு அஜித் வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

Ajith Promise to Boney Kapoor : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தல அஜித் நடிப்பில் வலிமை என்பது திரைப்படம் வெளியாக உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் : சில அரிய தகவல்கள்..

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து தற்போது ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கிறது.

Jai Bhim Issue: 5 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் – பா.ம.க.வழக்கறிஞர் பாலு ஆவேசம்.! | Suriya | HD

கொரோனா பேரிடர் காலம், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிப்போனதால் படத்தின் பட்ஜெட் திட்டமிடப்பட்ட 25 கோடியைத் தாண்டி சென்றுள்ளது. இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த தல அஜித் அடுத்ததாக சிறிய பட்ஜெட்டில் படம் ஒன்றை செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனால் தான் தல 61 திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.