ரசிகர்களின் செயலால் அதிருப்தியான அஜித் - கட்டுப்பாடுடன் நடக்குமாறு அறிக்கை! | Valimai | THala Ajith

Ajith Press Release about Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்திலும் போனிகபூர் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி ஓரளவிற்கு முடிவடைய உள்ளது.

இப்படியான நிலையில் தல ரசிகர்கள் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, விளையாட்டு மைதானம், கோவில், போன்ற பொது இடங்களில் ரசிகர்கள் அப்டேட் கேட்பது வருத்தம் முறை செய்கிறது என்று கூறியுள்ளார் தல அஜித்.

மேலும் சினிமா ஒரு தொழில் நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை.நம் செயல்களே சமூகத்தில் நம்மீது உள்ள மரியாதையை கூடும் என்றும் கூறியுள்ளார்.

Ajith Press Release about Valimai Update

இதை மனதில் கொண்டு பொது வெளியிலும் சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

மேலும் என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தல அஜித்தின் இந்த அறிக்கை வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தக் கோரிக்கையை அஜித் ரசிகர்கள் ஏற்று பொறுமையை கடைப்பிடிப்பார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.