Ajith praised from Nerkonda Paarvai team | H. Vinoth | Shraddha Srinath | Vidya Balan | Yuvan Shankar Raja | Nirav Shah | Gokul chandran
Ajith praised from Nerkonda Paarvai team

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித் நடித்து முடித்ததும் ஒட்டுமொத்த படக்குழுவும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாகம் செய்தார்களாம்.

Ajith praised from Nerkonda Paarvai team – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சில நாட்களாக ஒரே மாதிரியான வேடத்தில் நடித்துவந்த அஜித் இப்படத்தில் ஒரு மாறுதலாக வழக்கறிஞர் வேடத்தில் அதுவும் நடிப்புக்கு தீனி போடும் வேடத்தில் நடித்துள்ளார்.

இதனால் தினம்தினம் படப்பிடிப்பில் கனமான காட்சிகளில் அஜித் நடித்து முடித்ததும் ஒட்டுமொத்த படக்குழுவும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாகம் செய்தார்களாம்.