Ajith Political Poster in Madurai
Ajith Political Poster in Madurai

அரசியல் பேச மாட்டார் அரசியலே தலையை பற்றி பேசும் என மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

Ajith Political Poster in Madurai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதாவது தல அஜித் அரசியல் பேச மாட்டார் ஆனால் அந்த அரசியலே அஜித்தை பற்றி பேசும் என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

தல Vs தளபதி : டுவிட்டர் டிரெண்டிங்கில் பிகில் சாதனையை ஓரங்கட்டிய அஜித் ரசிகர்கள் – இதோ பாருங்க!

தல அஜித் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை அவர் அரசியல் பேசுவதில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பதோடு எனக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு முடிந்து விட்டது என கூறி வருபவர்.

ஆனால் அரசியல் தலைவர்கள் பலரும் அஜித்தைப் பற்றி பல்வேறு இடங்களில் பேசியுள்ளனர். சமீபத்தில் கூட திமுகவைச் சேர்ந்த டிஆர்பி ராஜா அஜித்தை பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதிமுகவைச் சேர்ந்த பல அமைச்சர்கள் தல அஜித் குறித்து பேசியுள்ளனர். இதுபற்றிய போஸ்டராக தான் இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ளனர்.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.