Ajith photography

Ajith Photography : பிரபல இசையமைப்பாளரை தல அஜித் போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்திலும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

அஜித் ரசிகர்களுக்கு ஒரு செம செய்தி – நேர்கொண்ட பார்வை குறித்த சூப்பர் அப்டேட்!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் நிறைவடைந்து இருந்தன. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் அஜித்தையும் படக்குழுவையும் சந்தித்து இருந்தார்.

அஜித்துடன் அவர் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஜிப்ரானும் நடிகை வித்யா பாலனும் சேர்ந்து எடுத்து கொண்டுள்ளனர். இதனை தல அஜித் எடுத்தார் எனவும் அந்த பதிவில் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.