Ajith Photo

Ajith Photo : தல அஜித்தால் ஒரே நாளில் ஒபாமா லெவலுக்கு பேமஸான பெண் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார்.

பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை வித்யா பாலன் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மங்காத்தா 2 படத்திற்கு இவரா இசை? – வெங்கட் பிரபு வெளியிட்ட அப்டேட்.!

இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ரசிகர்கள் பலரும் அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். பெண் ஒருவரும் தான் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் வைரலானது.

அந்த பெண் யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.

அதாவது அவர் ஒரு நடன கலைஞர். விஜய், விக்ரம் படங்களில் எல்லாம் நடனமாடி உள்ளாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.